நெடுந்தூரப் பயணம்போல
நீண்டு கொண்டிருந்தது
எங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த உரையாடல்.
பெரும்பான்மை நுகர்வாளர்களின்
திருப்திக்குரிய பொருளாக மட்டுமே
கற்பிக்கப்பட்ட அழகியலை
உடைக்க நேர்ந்ததன்
விளைவுதான் எதிர் அழகியல்
எனக் கொண்டாடப்பட்டது.
என் முகங்களின் மீது
படர்ந்திருந்த பாவிக்கப்பட்டிருந்த
மேல்தட்டு அழகியலின் சாயல்கள்
மெல்ல உதிர்ந்தன
உரையாடலின் புரிதலைச் சாத்தியப்படுத்த.
சம்பாஷனைக்குப் பிறகு
விடைப்பெற்ற நண்பர்கள்
பாதைநெடுக கழற்றி எறிந்தார்கள்
அழகியலையும் அதன் முகமூடிகளையும்.
இப்பொழுது புதியதாக
ஓர் எதிர் அழகியல்.
ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
2 comments:
யப்பா சாமி! கவிதை எழுதுறது எவ்வளவு கஷ்டம்ன்னு இதை படிக்கும்போதுதான்யா தெரியுது!!
வணக்கம் நண்பா. கவிதை எளிமைக்கும் கடினத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு தரிசனம். நன்றி
Post a Comment