மூதாதையர்களின் சிரிப்பொலிகளை
இரவுநேர கதைகளை
ஜெனரேட்டர் ஒலிகளை
நெல்லிக்காய் மரத்திற்காக மழைக்காலத்தில்
வந்துசேரும் பறவைகளை
அடிக்கடி தவறவிடும் வெளிச்சங்களை
தாத்தாவின் குரட்டை சப்தங்களை
வெளிக்கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும்
அம்மாச்சியின் உடைகளை
மரத்தோம்பு வாளியின் நீர் மேற்பரப்பில்
எப்பொழுதும் மிதக்கும் ஒரு வானத்தை
எல்லாவற்றையும் விழுங்கிய மீதமாக
இறந்தகாலத்தின் ஓசைகளாக
இன்றும் நெளிகிறது ஒரு பழங்கிணறு.
நெல்லிக்காய் மரத்திலிருந்து
இன்று உதிரக்கூடும்
முன்பிருந்த
ஒரு வானமும் சில மழைக்காலங்களும்
நாய்க்குட்டியும் நானும்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
4 comments:
நல்ல கவிதை பாலமுருகன்.
நெகிழ வைக்கும் வரிகள்
மிக்க நன்றி நண்பர்களே.
நல்லா இருக்கு பால முருகன் வார்த்தைகள் கொஞ்சம் பழைய ஞாபகங்களை தூண்டுகின்றன
நன்றி
ஜேகே
Post a Comment