Thursday, April 29, 2010

கவிதை: அடைவதும் பெறுவதும்

1
ஆழ்மனதை
அடைய
அடைய
அடைய
அடைய
எல்லாமுமாக ஆயிருந்தேன்.

2
கோபத்துடனும்
பொறாமையுடனும்
பேராசையுடனும்
காழ்ப்புணர்ச்சியுடனும்
கொலையுணர்வுடனும்
அவர்கள் தூக்கி எறிந்த
அத்துனை சொற்களையும்
புணர வேண்டியிருந்தது.

3
புறக்கணிக்கப்பட்டவர்கள்
தனக்கென ஒரு கதைப்பாத்திரத்தை
வேண்டி
மீண்டும் மகாபாரதத்திற்குள்ளும்
இராமாயணத்திற்குள்ளும்
காப்பியங்களுக்குள்ளும்
நுழைந்து
ஆளுக்கொரு வரலாறை
புனைந்துகொண்டார்கள்.

4
மௌனத்திற்குள்
ஆழ்ந்து கிடக்கும்போது
ஒரு சொல் கிடைக்கிறது.
அதைக் கொண்டு மீண்டும்
மௌனத்திலிருந்து விடுப்படக்கூடும்.
மீண்டும் அந்தச் சொல்லைத்
தொலைப்பதன் மூலம்
மீண்டும் ஒரு மௌனத்தை அடையலாம்.
சொல்லின் பெயர் “நான்”

கே.பாலமுருகன்
மலேசியா

5 comments:

VELU.G said...

நல்லாயிருக்குங்க

வாழ்த்துக்கள்

கே.பாலமுருகன் said...

மிக்க நன்றி வேலு

dheva said...

Bala....Very Nice ur pome....!Keep it up....vaazthukkal!

மதுரை சரவணன் said...

//மீண்டும் அந்தச் சொல்லைத்
தொலைப்பதன் மூலம்
மீண்டும் ஒரு மௌனத்தை அடையலாம்.
சொல்லின் பெயர் “நான்”//
real one . all search who am i? super .

Unknown said...

மீண்டும் ஒரு மௌனத்தை அடையலாம்.
சொல்லின் பெயர் “நான் wow நல்லாயிருக்குங்க