கைக்கு எட்டாத கரும்பலகை
சொற்களை எகிறி குதித்து
அழிக்க முயல்கிறாள்
சிறுமி.
ஒவ்வொருமுறையும்
கால்கள் தரையைத் தொடும்போது
சொற்காளின் பாதி
உடல் அழிக்கப்படுகிறது.
எட்டாத சொற்களின்
மீத உடலைச் சிதைக்க
மீண்டும் குதிக்கிறாள்.
உடலின் மொத்தப்பலத்தை
கால்களில் திரட்டி
பாய்கிறாள் ஆவேசம்கொண்டு.
கடைசி சொல்லின்
உடலை அடையும்வரை
சோர்வில்லை விலகலுமில்லை.
கரும்பலகையின் கோடியில்
மிச்சமாக இருந்த ஒரு எழுத்தை
அழித்துவிட்டப் பிறகு
சிறுமியின் முகத்தில்
போர் முடிந்த களைப்பு.
கே.பாலமுருகன்
சொற்களை எகிறி குதித்து
அழிக்க முயல்கிறாள்
சிறுமி.
ஒவ்வொருமுறையும்
கால்கள் தரையைத் தொடும்போது
சொற்காளின் பாதி
உடல் அழிக்கப்படுகிறது.
எட்டாத சொற்களின்
மீத உடலைச் சிதைக்க
மீண்டும் குதிக்கிறாள்.
உடலின் மொத்தப்பலத்தை
கால்களில் திரட்டி
பாய்கிறாள் ஆவேசம்கொண்டு.
கடைசி சொல்லின்
உடலை அடையும்வரை
சோர்வில்லை விலகலுமில்லை.
கரும்பலகையின் கோடியில்
மிச்சமாக இருந்த ஒரு எழுத்தை
அழித்துவிட்டப் பிறகு
சிறுமியின் முகத்தில்
போர் முடிந்த களைப்பு.
கே.பாலமுருகன்
4 comments:
ஒரு சிறுமியின் முயற்சியை அதன் சித்திரத்தை இந்தக் கவிதை விபரிக்கிறது. குழந்தைகளின் உலகத்தை புரிந்தை அதை எழுதுவதற்கு குழந்தைகளாக மாற வேண்டியிருக்கிறது. குழந்தைகளை ஆழமாகப் புரிந்து கொண்டு எழுதியிருக்கறீர்கள் பாலமுருகன்.
வாழ்த்துக்கள் இத்தகைய பதிவுகள் மிகவும் அவசியமானவை. தொடர்ந்து எழுதுங்கள்...
தீபச்செல்வன்: மிக்க நன்றி உங்களின் வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும். ஆரோக்கியமான பார்வை.
அருமை நண்பரே கவிதையும் படமும்
பிரேம்குமார்: மிக்க நன்றி நண்பரே.
Post a Comment