ஒரு நீண்ட உரையாடலின்போது
எனக்கும் கடவுளுக்கும்
சர்ச்சை உருவாகியிருந்தது
யார் முதலில் தோற்க வேண்டும்
என்கிற தொடர் விவாதத்தில்
நானும் கடவுளும் ஒருவொருக்கொருவர் மண்டியிட்டு
கெஞ்சல்களை பரிமாறிக்கொண்டோம்.
ஒருவர் மீது ஒருவர்
மெல்லிய துரோகங்களாக
படிந்திருக்கும் சந்தர்ப்பத்தில்
யார் முதலில் யாரை தூக்கி வீசுப் போகிறோம்
என்கிற அச்சம் பரவியிருந்தது.
மீதமிருந்த என் எச்சங்களைக் கடவுளும்
கடவுளின் இல்லாமைகளின் உக்கிரத்தை நானும்
ஒரு சுமையென தூக்கிக்கொண்டு
மீண்டும் சராசரி கடவுளாக
பக்தனாக பாமரனாக
துரோகியாக நாயாக
பேயாக புழுவாக
மண்ணாக சிவனாக.
கே.பாலமுருகன்
நன்றி: திண்ணை
bala_barathi@hotmail.com
எனக்கும் கடவுளுக்கும்
சர்ச்சை உருவாகியிருந்தது
யார் முதலில் தோற்க வேண்டும்
என்கிற தொடர் விவாதத்தில்
நானும் கடவுளும் ஒருவொருக்கொருவர் மண்டியிட்டு
கெஞ்சல்களை பரிமாறிக்கொண்டோம்.
ஒருவர் மீது ஒருவர்
மெல்லிய துரோகங்களாக
படிந்திருக்கும் சந்தர்ப்பத்தில்
யார் முதலில் யாரை தூக்கி வீசுப் போகிறோம்
என்கிற அச்சம் பரவியிருந்தது.
மீதமிருந்த என் எச்சங்களைக் கடவுளும்
கடவுளின் இல்லாமைகளின் உக்கிரத்தை நானும்
ஒரு சுமையென தூக்கிக்கொண்டு
மீண்டும் சராசரி கடவுளாக
பக்தனாக பாமரனாக
துரோகியாக நாயாக
பேயாக புழுவாக
மண்ணாக சிவனாக.
கே.பாலமுருகன்
நன்றி: திண்ணை
bala_barathi@hotmail.com
6 comments:
அசத்தல் பாலா!
உங்களுடைய எழுத்துக்களின் இந்தக்கவிதை என்னை மிகவும் வசீகரித்து விட்டது. தொடருங்கள் பாலமுருகன்.
மிக்க நன்றி சென்ஷி. பதிவுக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்
நல்லாருக்கு!
கடவுளுடன் உங்களது உறவும், எழுத்தின் வலிமையும், ஓயாது நீளும் அந்த உரையாடலின் இடையே உள்ள அமைதியும் நிறையவே என்னை கவர்ந்தது.
அன்புள்ள அருணா @ சாய்ராம் பதிவிற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. வருக.
Post a Comment