Thursday, September 22, 2011

கவிதை: உணர்க்கொம்பு

எலும்புகள் சில்லிட
உறையும் பனிக்குள்ளிருந்து
திக்காக வடிகின்றன
உன்னைப் பற்றிய பதிவுகள்.
மரணத்திற்குத் தயாரான
வாய், மூக்கு, கைகள்
மூச்சிரைப்பு என
என் மீதிருந்த அழுக்குகளைக்
குவித்து திட்டுகளாக்கித் தடவுகிறேன்.
வாய் குளறும்போது
சொற்கள் தாரைதாரையாக வழிகின்றன.

இனி இறுகப் போகும்
என் ஒவ்வொரு தருணத்திலிருந்தும்
கொஞ்சம் கதகதப்பு
கொஞ்சம் இளஞ்சூடு
யாரும் விரும்பாத கடைசி கெக்களிப்பு
அனைத்தையும் புன்முறுவலோடு
விட்டுச்செல்லலாம்.
பனி மேடு ஓலமிடுவதுமாய்
இரவு சரிந்து சொட்டுகளாகுவதுமாய்
கழிந்து முடிந்தது விடுமுறை.

கே.பாலமுருகன்

No comments: